"சி" மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி

கோவை : கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் "சி" மண்டல கல்லூரிகளுக்கான நடந்த வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டத்தினை பெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் "சி" மண்டல கல்லூரிகளுக்கான வாலிபால் போட்டி கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவு பெற்றது. இம்மண்டலத்தில் இருந்து மொத்தம் 22 கலை அறிவியல் கல்லூரிகளின் அணிகள் போட்டிகளில் பங்கேற்றன

முடிவில் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தினை பெற்றது. இரண்டாம் இடத்தினை  பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி தட்டிச்சென்றது. மூன்றாம் இடத்தினை நேரு கலை அறிவியல் கல்லூரியும், நான்காம் இடத்தினை பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Newsletter